.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Wednesday, 7 September 2016

பெரியார்

90-வது வயதில்  180 கூட்டம்.
91-வது வயதில்  150 கூட்டம்.
93-வது வயதில்  249 கூட்டம்.
94-வது வயதில்  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.
அவர்தாம் பெரியார் !!!  

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

IAS தேர்வு என்றால் என்ன ?

IAS தேர்வு என்றால் என்ன ?

                              IAS  மற்றும் IPS  உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

IAS  தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?

                                ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS  தேர்விற்கான வயது வரம்பு என்ன ?

                குறைந்தபட்ச வயது : 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

                அதிகபட்ச வயது   :   பொதுப்பிரிவினர் (GENERAL) : 32 

                                                                பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

                                                                ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?

   பொதுப்பிரிவினர் (GENERAL)                    : 6 முறை

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC)        : 9 முறை

    ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST)   : எண்ணிக்கை இல்லை(Unlimited)

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?

சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்புஆளுமை அதிகாரம்பெருமதிப்பிற்குரிய பணிசமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை   மேலும் பல…..


IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?

                                இல்லை.அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?

                                முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?

                                இல்லை.ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.என்னால் முடியுமா ?

                                கண்டிப்பாக முடியும். இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.உண்மையான போட்டியாளர்கள் என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?

                                இல்லை. IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.அந்தப் பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?

                                முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?

                                IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.அது ஓர் போட்டித் தேர்வு.ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?

                                முற்றிலும் தவறான கருத்து.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?

                                இல்லை.நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்சரியான திட்டமிடல்திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்மாதிரித் தேர்வுகள் எழுதுதல்சரியான வழிகாட்டல்இறுதியாக  முழு நம்பிக்கையோடு இருத்தல்


                                இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் ஒர் IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..

கேரள அரசுக்கு 'செக்' வைக்க பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்

கேரள அரசுக்கு 'செக்' வைக்க பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்

ஊட்டி: சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு, 'செக்' வைக்க, 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்துக்கு, அரசு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரள அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயன்று வருகிறது. இதனால், நீலகிரி, கோவை மாவட்டங்கள் உட்பட்ட, பவானி, சிறுவாணி நீரை நம்பியுள்ள, 4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலமும், பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கேரளாவின் இந்த முயற்சிக்கு, 'செக்' வைக்கும் வகையில், நீலகிரியில் உற்பத்தியாகி, பாண்டியாறு வழியாக, கேரளாவுக்கு செல்லும், 16 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க, 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்துக்கு, மாநில அரசு, உடனடியாக செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற கோஷம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள பாண்டியாற்றின் நீர் முழுவதும் கேரளாவுக்கு சென்று, புன்னம்புழா ஆற்றில் கலந்து, கடலில் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு பயன்படுத்தும் வகையிலும், மின் உற்பத்தி செய்யவும், பாண்டியாறு - புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் பாயும், 10க்கு மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, மின் உற்பத்திக்கான அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

ஆனால் திட்டத்துக்கு, கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதற்கு காரணம், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து, அடியோடு நின்றுவிடும். இன்று, அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை, கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வருகின்றன. ஆகவே, பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் உள்ளிட்ட, பிற முக்கிய அணை திட்டங்களை, தமிழக அரசு நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

கருப்பையாறு என்கிற ஆறு தமிழ்நாட்டில் அணைமுகம் (விளவங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்) என்ற இடத்தில் உற்பத்தியாகி கேரளாவில் நெய்யாறு அணையில் சென்று கலக்கிறது.

  தமிழகத்தில் பெய்யும் மழையின் மழை நீர் வடிந்துதான் நெய்யாறு அணை பெரும்பாலும் நிரம்புகிறது. 

நெய்யாறு அணையிலிருந்து இடதுகரை சானலின் வழியாக கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் வருகிறது. 1984 இருந்து கேரள அரசு இடது கரை சானலில் தண்ணீர் விடுவதில்லை. 

பெரும்பாலான விவசாயிகள் இரப்பர் மர முதலாளியாகிவிட்டனர்.  சானல் தண்ணீருக்கான தேவை பெரும்விவசாயம் செய்பவர்களுக்கு இல்லை மழையே போதும்.  

ஆனால் மற்ற சிறுவிவசாயிகள் விவசாயத்தை மறந்து கூலிகளாகிவிட்டனர். தமிழர்கள் இடது கரை சானலில் தண்ணீர் கேட்டு கேரள அரசை கெஞ்ச வேண்டியதில்லை.  

கருப்பையாறு தண்ணீர் கேரளாவுக்கு போவதை தடுத்து தமிழ்நாட்டை நோக்கி திருப்பினாலேபோதும்.                    

நேருவின்_சரித்திர_பிழைகள்

 நேருவின்_சரித்திர_பிழைகள் 
#மேலும்_தொடர்கின்றன‌ 

சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீர் "சட்டசபையில்" ஜம்முவை விட காஷ்மீருக்கு அதிக தொகுதிகளை வழங்கினார் நேரு.  1941 மக்கள் தொகை கணக்கு படி ஜம்முவில் 20 லட்சம் பேரும், காஷ்மீரில் 17 லட்சம் பேரும்,  "லதாக்" மற்றும் "கில்கித்தில்" 3 லட்சம் பேரும் வசித்தனர்.  ஆனால் இவற்றை குறித்து சிறிதும் கண்டு கொள்ளாமல்,  மக்கள் தொகை கணக்கெடுப்பையும் எடுக்காமல்,  மொத்தம் இருந்த 72 தொகுதிகளில் காஷ்மீருக்கு மட்டும் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட‌து.    இதனால் ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை எந்த தீர்மானத்தையும்,  காஷ்மீர் பள்ளத்தாக்கே தீர்மானிக்கும் வகையில் அமைந்தது.  காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களோ பெரும்பாலும் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லீம்கள். (தற்போது காஷ்மீர் பகுதியில் காஷ்மீருக்கு 46 தொகுதிகளும்,  ஜம்முவுக்கு 37 தொகுதிகளும், லதாக் பகுதிக்கு 4 தொகுதிகளும் உள்ளன)   மேலும் 1951ல் ஜம்மு-காஷ்மீரில் நடந்த‌ தேர்தலில், பெரும் முறைகேடுகள் அரங்கேறின‌. பல வாக்குசாவடிகள்  ஷெயிக் அப்துல்லாவின் "நேஷனல் கான்ஃபெரன்ஸ்" ஆல் கைப்பற்றப்பட்டது.  இதனால் அந்த கட்சி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.  இதை குறித்து நேரு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சொல்லப்போனால் நேருவின் ஆதரவோடுதான் அனைத்தும் அரங்கேறின. இந்த தேர்தலை அங்கீகரித்து இந்திய பாராளுமன்றம் ஒப்புதலை அளித்தது.  இதற்கு "எஸ் பி முகர்ஜி" போன்றவர்கள் கடும் ஆட்சேபங்களை தெரிவித்தனர்.  

காஷ்மீர் மற்றும் இந்திய சரித்திரத்தை புரட்டிப் போடும் "ஆர்டிக்கிள் 306-A"  அரங்கேறியது.  இதுதான் இன்றைக்கு இந்தியாவுக்கு மிகப்பெரும் தலைவலியை கொடுத்துவரும் "ஆர்டிக்கிள் 370"-ன்  முன்னோடி மற்றும் ஆதாரம்.  நேரு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்த தனித்துவமான சட்டத்தை வடிவமைக்க, ஷேக் அப்துல்லாவை,  சட்டமேதை டாக்டர் அம்பேத்கரிடம் அனுப்பி வைத்தார்.  ஆனால்,  அம்பேத்கரோ இதை வடிவமைக்க மறுத்து விட்டார்.   அம்பேத்கார் இதை குறித்து ஷெயிக் அப்துல்லாவிடம் குறிப்பிடுகையில் "மிஸ்டர் அப்துல்லா,  நீங்கள் இந்தியா, காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்,  இந்தியா, காஷ்மீரை வளர்ச்சி பெற வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்,  காஷ்மீர் வாசிகள் இந்திய குடிமகன்கள் போல் சம உரிமை கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்,  ஆனால் நீங்கள் ஏன் இந்தியர்கள் காஷ்மீரில் சம உரிமை பெறக் கூடாது என்று நினைக்கிறீர்கள் ?  இது மிகத்தவறானது.  நான் இந்தியாவின் சட்ட அமைச்சர்.  நான் என் நாட்டுக்கு துரோகம் இழைக்க இயலாது"

அம்பேத்கார் அந்த சிறப்பு சட்டத்திற்கான வரையறையை வடிவமைக்க மறுத்த பின்னர் நேரு வேறு ஒருவரை வைத்து அதை வடிவமைத்தார்.  நேருவின் காங்கிரஸ் கட்சி அந்த "306 ஏ" சிறப்பு சலுகையை பாராளுமன்றத்தில் அங்கீகரித்தது.   நேரு இந்த நாட்டுக்கு செய்த மிகப்பெரும் துரோகமாக அது திகழ்ந்தது... திகழ்கிறது..

ஆக நேருவால் காஷ்மீருக்கு அதிக தொகுதிகள்,  அதிக ஆளுமை,  மற்றும் சிறப்பு சலுகைகள் என பலவும் வழங்கப்பட்டது.  இதன் மூலம் ஜம்மு காஷ்மீரால் தங்கள் பிராந்தியத்துக்கு தேவையான சட்ட திட்டங்களையும்,  குடிமகன்களுக்கு உண்டான வரையறைகளையும் இயற்றி கொள்ள முடிந்தது.  ஜம்மு காஷ்மீர் சட்டப்படி,  அதன் குடிமகன்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படுவார்கள்,  ஆனால் இந்திய குடிமகன்கள்,  ஜம்மு காஷ்மீரின் குடிமகன்களாக கருதப்பட மாட்டார்கள்.  மேலும் இந்தியாவின் "ஐ பி சி" சட்டைத்தை அமலாக்காமல் "ரன்பீர் பெனல் கோட்" (Ranbir Penal Code) எனும் தனிச்சட்டத்தை அது அமலாக்கியது..  ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார் ஷெயிக் அப்துல்லா !!  (ஜம்மு காஷ்மீர் தனிநாடு என்கிற வகையில் அப்போது அவர் பிரதம மந்திரி) இவை குறித்த பல தகவல்களை  நேரு பாராளுமன்றத்திற்கு கூட தெரியாமல் மறைத்து வைத்து காய் நகர்த்தியது வேறு தனிக்கதை.   

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு "தனி நாடு" அந்தஸ்தையும்,  தனி "கொடியையும்"  வழங்கிய நேருவை கண்டித்து ஒரு மாபெரும் போராளி களம் இறங்கினார்.   இந்தியா துண்டாடப்பட்ட‌தை தன்னுடைய உடல்,  பொருள் ஆவி என அனைத்தையும் கொண்டு எதிர்த்தவர் அவர்.  காஷ்மீரில் இந்திய குடிமக்கள் தங்குவதை தடை செய்யும் சட்டத்தையும்,  காஷ்மீருக்குள் செல்லும் இந்திய குடிமக்கள் அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும் எனும் நிபந்தனையையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.  இந்தியா முழுவதும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சுடன் போராடினார்.  நேருவின் முஸ்லீம் ஆதரவு கொள்கையை அவர் சாடினார்.  காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு சலுகைகளை எதிர்த்து உண்ணாவிரத்தை தொடங்கினார் அந்த மாவீரர்.   அவர் பெயர் "ஷ்யாம் பிரசாத் முகர்ஜி"                         
நேரு மீண்டும் சொதப்பினார்.... 

ஜின்னாவுக்கும் சரி , இதர பாகிஸ்தானியர்களுக்கும் சரி.. காஷ்மீர் முஸ்லீம்கள் மீது என்றுமே பெரிய மரியாதை கிடையாது.... காஷ்மீர் முஸ்லீம்கள் ஹிந்துக்களின் சிறுநீரில் இருந்து பிறந்தவர்கள் என்று சொன்னவர் ஜின்னா..[ இது தெரியாமல்தான் அந்த அடிமுட்டாள்கள் பாகிஸ்தான் கொடியை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்...]

தேசப்பிரிவினை நேரம்...ஓரளவு இந்திய - பாக் எல்லைகள் உறுதியாகிவிட்டன...ஆனால் காஷ்மீர் மட்டும் எந்தப் பக்கமும் சேரவில்லை... அன்று காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்தவர் ஒரு ஹிந்து மன்னர் .. பெயர் ஹரிசிங்... 

காஷ்மீர் இஸ்லாமியர்களின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தவர் ஷேக் அப்துல்லா , அங்கிருக்கும் மக்களை அடித்து விரட்டிவிட்டு , முழுமையான இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்கும் கனவு கொண்டவர்...

ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் இணைவதில் தயக்கம் இருந்தது.. காரணம் அவருக்கு நேருவைப் பிடிக்காது...            [ நேருவுக்கு ஷேக் அப்துல்லாவை பிடிக்கும் ] அப்போது ஹரிசிங்கின் ஆலோசகராக இருந்தவரின் மனைவி ஒரு பிரிட்டிஷ் பெண்மணி... அவர் மௌண்ட்பேட்டனுக்கு நெருக்கமானவர்... அந்த ஆலோசகர் காஷ்மீர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்....

காஷ்மீரை தாக்குவதற்கு இது தான் நல்ல சமயம் என்று தீர்மானித்தார் ஜின்னா... நேரடியாக தாக்கினால் பிரச்சினை ஆகிவிடும் , ஆகவே பட்டானியர்கள் என்னும் பழங்குடியினரை காஷ்மீரை தாக்கும்படி உத்தரவிட்டார்... படடானியர் போர்வையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர்  .. ஒவ்வொரு ஆயிரம் பட்டானியர்களுக்கும் ஒரு பாகிஸ்தான் கமாண்டர் தளபதியாக நியமிக்கப்பட்டனர்... 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் , கொலை செய்யலாம் , யாரை வேண்டுமானாலும் கற்பழிக்கலாம்... காஷ்மீரை ஆக்கிரமிப்பது மட்டும் தான் முக்கியம் என்று சொல்லி அனுப்பினர்.... பட்டானியர்கள் காஷ்மீரை தாக்க ஆரம்பித்தனர்....

அப்போது இந்திய ராணுவத்தில் ஒரு சிக்கலான நிலைமை இருந்தது.... இந்தியா , பாகிஸ்தான் இரண்டு நாட்டு ராணுவங்க‌ளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர் ராணுவ அதிகாரிகளாக இருந்தார்கள்... 

பாகிஸ்தானின் ராணுவத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த வெள்ளையர்கள் ஜின்னாவின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் உறு துணையாக இருந்தார்கள்.... காரணம் இந்தியா பிரிய வேண்டும் ,, பெரிய நாடாக இருந்தால் வருங்காலத்தில் சக்தி உள்ள நாடாக மாறி விடும் என்ற பயம் வெள்ளையர்களுக்கு இருந்தது  

ஆனால் இந்திய ராணுவத்தின் உயர் பொறுப்பில் இருந்த வெள்ளையர்களோ, நேருவை கைக்குள் வைத்து கொண்டு  படேல் போன்ற தலைவர்களின் பேச்சை கேட்காதவர்களாகவும் , மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர்....

காஷ்மீருக்குள் புகுந்த பட்டானியர் கும்பல் வெறியாட்டம் ஆடியது... எல்லா வீடுகளும் , கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன‌...  ஆண்கள் கொல்லப்பட்டனர் , பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்... ரத்த ஆறு ஓடியது... ஹரிசிங் செய்வதறியாது திகைத்தார்....இனி இந்தியாவின் துணையில்லாமல் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்தார்... 

இருந்தும் நேரு - ஷேக் அப்துல்லாவின் நட்பை நினைத்து ஒதுங்கவும்  செய்தார்.... 

இந்த நிலையில் ஒரு அதிசயம் நடந்தது.... மன்னர் ஹரிசிங்கை இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்க வைக்க ஒரே ஒருவரால் தான் முடியும் என்று படேல், நினைத்தார்... அவர் தான் அவர் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் பரமபூஜனீய கோல்வர்கர்... 

இதை பற்றி நேருவிடம் பேசி , நம் நாட்டுக்கு  காஸ்மீரை இணைப்பது தான் நல்லது என்று பேசி குருஜியை சந்திக்க சொன்னார் படேல் 

குருஜியை நேரில் சந்தித்த நேரு , ஹரிசிங்குடன் பேசி சம்மதிக்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார்... குருஜிக்கு தெரியும் படேல் சிந்தனை படி நேரு தம்மை சந்த்திக்கிறார் என்று ,,, இருந்தாலும் காட்டி கொள்ளாமல்                                

நேருவின் வேண்டு கோளை ஏற்ற குருஜி காஷ்மீர் சென்று மன்னர் ஹரிங்கை சந்தித்து இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்க வைத்தார்... காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானது.... 

பட்டானியர் கும்பலை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு வந்தது... ஆனால் இந்த நிலையிலும் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள மௌண்ட் பேட்டனும் ராணுவத்தின் உயர் பொறுப்பில் இருந்த வெள்ளையர்களும் சம்மதிக்கவில்லை... 

நடப்பது காஷ்மீர் மக்களின் கிளர்ச்சி .. அதை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கினால் தவறாகிவிடும் என்று சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டிருந்தனர்....

அப்போது ஒரு கொடூரம் நடந்தது...காஷ்மீருக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த பட்டானியர்கள் , வழியில் இருந்த கிறித்தவ மடாலயம் ஒன்றை தாக்கினர்.... அங்கிருந்த பாதிரியார்கள் உள்ளிட்ட அனைத்து கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்... கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டனர்... சர்ச் சூறையாடப்பட்டது...

இது வரை தர்மநியாயம் பேசிக் கொண்டிருந்த மௌண்ட்பேட்டனுக்கு இப்போது தர்ம சங்கடம் ஆகிவிட்டது.... கொல்லப்பட்டவர்கள் கிறித்தவர்கள் ஆயிற்றே ? ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் எகத்தாளம் பேசிக் கொண்டிருக்கலாம்... கிறித்தவர்கள் உயிர் விலை மதிப்பற்றது ஆயிற்றே ? வேறு வழியில்லாமல் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற் கொள்ள மவுண்ட்பேட்டன் உத்தரவிட்டார்...

ஆனால் அதற்குள் காஷ்மீரில் நிலவரம் கைமீறும் நிலைக்கு வந்து விட்டது....  பட்டானியர் கும்பல் ஸ்ரீநகருக்கு மிக அருகில் வந்து விட்டனர்... எந்த நேரத்திலும் விமான நிலையம் அவர்கள் கைக்குள் விழும் நிலை......  விமான தளத்தின் ஓடுபாதையோ , ராணுவ விமானங்கள் இறங்கும் அளவுக்கு இல்லாமல் பழுதடைந்து கிடந்தது....

இந்நிலையில் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ்.... தங்கள் உயிரையும் பொருட்படுத்தாத ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் ஓடுபாதையை போர்க் கால வேகத்தில் சீரமைத்து , இந்திய ராணுவ விமானங்கள் இறங்க வழி செய்து கொடுத்தனர்...  நம் ராணுவம் ஸ்ரீ நகரில் இறங்கி பட்டானியர் கும்பலை ஓட ஓட விரட்டியது....

அவர்களை அடித்து விரட்டி கொண்டிருக்கும் வேளையில் நேரு மீண்டும் சொதப்பினார்.... படேல் மற்றும் இந்திய ராணுவத்தில் இருந்த இந்திய அதிகாரிகளின் பேச்சைக் கேட்காமல்  ஷேக் அப்துல்லா மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகியோரின் ஆலோசனையின் படி  காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா வுக்கு எடுத்துச்சென்றார்.... போர் நிறுத்தம் ஏற்பட்டது... காஷ்மீருக்குள் குறிப்பிடத்தக்க தூரம் ஊடுறிவியிருந்த , பட்டானியர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் ராணுவம் அதே இடத்தில் நிலை கொண்டது... அந்த பகுதிதான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் ஆசாத் காஷ்மீர்..

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தம் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காஷ்மீர் , நமக்கு தீராத தலைவலியாக மாறிப் போனது இப்படித் தான்....

வீட்டு வைத்தியம் டிப்ஸ்..!

வீட்டு வைத்தியம் டிப்ஸ்..!

தீராத விக்கலை நிறுத்த...


1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளு
ங்கள்...நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
____ ___ ___ ___
கொட்டாவியை நிறுத்த...


கொட்டாவி வருவதற்கான
காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு
சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்!
____ ___ ___ ___
உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!
____ ___ ___ ____
வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.
____ ___ ___ ____
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது
வெற்றிலையில்ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
____ ___ ___ ____
வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.
____ ___ ___ ____
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும்
சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத்
தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து
தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து,
தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க
கடினமானவயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின்
படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று
உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து
நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட
தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட
இடத்தில்காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும்.
காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு
உப்பிக் காணின்,உப்பிலாங்கொடியை
அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன்
கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு
உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம்,
மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு
வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½
பங்கு சேர்த்து,எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி
கொடுக்கபித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும்
சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக்
காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத
புண்கள்
ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக்
களியாகக்
கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து
வீக்கமும் குறைந்து போகும்.
மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும்
சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு
மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக்
காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே
நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து
படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத்
தட்டிவீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம்
சென்றபின் வாய் கொப்பளிக்க
பல் ஈறு, வீக்கம்தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100
கிராம்,எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி
இரவு படுக்க போகும்பொழுது குடித்து
விட்டு படுக்கவும்.
நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து
தொடர்ந்துதடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும்
சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின்
நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு
பனைவெல்லம்கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு
மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து
சுண்ணாம்புபோடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து
உண்ணவும்.இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி,
வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி,
கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு
ஆகாரம் சாப்பிடவும்.இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து
கெச்சக்காய் அளவு
நல்லெண்ணையில் கலந்து
சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து
இடித்துபிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து
கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால்,
ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக்
குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு
சாப்பிட,மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு
3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை
சேர்த்துக்கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில்
மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக்
குலுக்கி கொடுக்கவும்.

GOOD MOTIVATION

GOOD MOTIVATION

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

இந்திய நாணயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இந்திய நாணயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! 

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,

ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,

டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,

நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,

எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி…உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்…

தெரிந்துகொள்ளவோம்

தெரிந்துகொள்ளவோம் 👍

🔹ஈ தனது உணவை உண்ட பின், அதை வெளியே துப்பி விட்டு மீண்டும் உண்ணும்.

🔹ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.

🔹அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் மாலையிலேயே நடக்கின்றனவாம்.

🔹சிவப்புநிற தலைமுடியை உடைய வெளிநாட்டவர்களுக்கு சராசரியாக 90000 முடிகள் இருக்குமாம். அதே வேளையில் நம்மைப் போன்ற கருப்புநிற தலைமுடியை உடையவர் களுக்கு 110000 முடிகள் இருக்குமாம்.

🔹கடலில் வாழும் சில ஆக்டோபஸ் வகைகள் சிலநேரங்களில் பசிக்கொடுமை காரணமாக தங்கள் கைகளையே பிய்த்து தின்று விடுமாம்.

🔹பாலைவனத்தில் மிகக்குறைந்த ஒலியைக் கூடக் கேட்க முடியும்.

🔹ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.

🔹நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால்
கொஞ்ச நாளையில் புது கண் உருவாகிடும்.

🔹ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

🔹கம்போடியா நாட்டில் ஓடும் டொன்லெ சாப் என்கிற நதியானது வருடத்தில் 6 மாதம் வடக்கு நோக்கியும் மீதி 6 மாதம் தெற்கு நோக்கியும் ஓடுகிறது

அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....

80வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.

நல்லபடியாக நடந்து முடிந்த பின்...

+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......

+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த 
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....

+ அதற்க்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....

+ எனக்கு அது பிரச்சினையில்லை,
 பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....

+ ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது, 
கண்ணீர் வழிகிறது,

+ மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு  பில்....

+ எல்லாம் வல்ல கடவுள் 
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

+ இறைவனின்
அருட்கொடைக்கு 
நிகர் இறைவனே.....

- நாம் தான் நன்றி கெட்டவர்களாக 
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

+ எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....

படிச்சிட்டு சிரிக்க கூடாது

படிச்சிட்டு சிரிக்க கூடாது
!!!!!!!!!!!!!!!!!!""!!!!""""""!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..?

வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்...?

EB ஆபிஸர் :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.

குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்.....

EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்...??

வியாபாரி :: This is my tariff plan. 
ஏன்டா கொய்யாலே....நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு.....வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க....கேட்ட tariffனு சொல்லூவீங்க...
Bloody rascals.....*

Banana vendor rocked and 
EB officer shocked.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் அல்லது ஒன்றியப் பகுதி.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் அல்லது ஒன்றியப் பகுதி.
========================================

இந்தியாவில் இயங்கும் 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரி பற்றி பலருக்கும் அதிகம் தெரிவதில்லை. அதை தெரியப் படுத்தும் முயற்சியில் இந்தப் பதிவு.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற போதிலும் எதனால் அதை மாநிலம் என்று அழைக்கிறோம். மாநில நிர்வாகத்திற்கும் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாசம்.

ஒன்றிரண்டு நகரங்களை உள்ளடக்கிய ஒன்றியப் பகுதி தான் யூனியன் பிரதேசம்.இங்கு மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல், குடியரசு தலைவர் அமைத்த ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்தப்படும்.
இதுவே மாநிலத்திற்கும் , ஒன்றியப் பகுதிக்கும் உள்ள வித்தியாசம்.

இந்த 7 ஒன்றியப் பகுதிகளில், புதுச்சேரியும், டெல்லி யும் மட்டும் விதிவிலக்கு. இவர்களுக்கு தேர்தல் மூலம் அரசமைக்கும் உரிமை உண்டு. இருப்பினும், ஒரு சில சட்டங்களுக்கு , குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அவரால் நியமிக்கப்பட்ட ஆளுனர்களாலே(கவர்னர்) முடிவுகள் எடுக்கப்படும்.

இதனால் தான், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உண்டு. நாமும் புதுவை மாநிலம் என்று அழைக்கிறோம்.

புதுச்சேரியின் வரலாறு :

4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுச்சேரி , காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்களின் கைகளில் இருந்தது.பின் பத்தாம் நூற்றாண்டில் நெற்களஞ்சியத்தை ஆண்ட சோழர்களின் கைக்கு வந்து 13ஆம் நூறாண்டில் பாண்டிய அரசிடம் சென்றது.

அதற்கு பின் , வெள்ளையர்களின் ஆட்சியில் புதுச்சேரி பிரான்சிடம் சிக்கியது.பிரஞ்சுக்கார்கள் ஆந்திராவில் உள்ள ஏனம் பகுதியையும் , கேரளாவில் உள்ள மாஹி யையும் , தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள காரைக்கால் யும் அடுத்தடுத்து பிடித்து அவர்கள் வசப் படுத்தினர்.

இதில் புதுச்சேரி மீண்டும் பந்தாடப் பட்டது.தமிழகத்தை ஆண்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கி மீண்டும் பிரஞ்சுக்காரகளால் மீட்கப் பட்டு அவர்கள் கைக்கே வந்தது.

சுதந்திரம் பெற்று பிரஞ்சுக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் ஆண்ட பகுதிகளைக் கொண்டு தனி ஒன்றியப் பகுதி அமைக்கப்பட்டது.

இதில் அந்த அந்த ஊர்களுக்கு வேறு மாநிலத்துடன் இணைய விருப்பம் இருக்கிறதா என்று அழைப்பு விடுத்த போதும், காரைக்கால் , மாஹி மற்றும் ஏனம் புதுச்சேரியுடனே இருக்க விருப்பம் தெரிவித்தன. இதனால் தான் இன்று வரை புதுவை அரசை சேர்ந்த மற்ற மூன்று ஊர்களும் ஆளுக்கொரு மூலையில் இருக்கின்றன.

புதுவையை பற்றி நீங்கள் அறியாத வரலாறு இன்னும் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் பிரான்சு ஜெர்மனை எதிர்த்து போராடிய போது பிரஞ்சுக்கார்கள் ஆண்ட பகுதிகளில் இருந்தும் காலனி ஆட்சி செய்த பகுதிகளில் இருந்தும் ஆட்களை கொண்டு வந்து குவித்தனர்.

அவ்வாறு போரில் ஈடுபட்டோருக்கு குடியுரிமைகளும் வழங்கி அவர்கள் மூலம் அவர்கள் தலைமுறையில் வரும் அவனைவரும் பிரெஞ்சு குடியுரிமை பெறும் சட்டத்தையும் இயற்றியது.

இது போக, பிரான்சு ஒரு கட்டத்திற்கு மேல் தன் நாட்டின் மக்கள் தொகை குறைவதை கண்டு அஞ்சியது.அவர்கள் நாட்டின் மக்கள் குழந்தைகளே பெற்றுக் கொள்ளாமல் இருந்ததும், ஒன்றோடு நிறுத்தி விடுவதுமே அதற்கு காரணம்.

தன் இனம் அழிந்து விடும் பயத்தில் மீண்டும் ஆட்சி செய்த இடங்களில் குடியுரிமை வழங்குவதாக மக்களுக்கு அழைப்பு விடுத்தது. இதனால் தான் இன்று பிரான்சில் அதன் ஆட்சின் கீழ் இருந்த எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் வாழ்கின்றனர்.புதுவை , காரைக்கால் , மாஹி , ஏனம் பகுதிகளில் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் இருக்கின்றனர் .

பிரான்சின் தாக்கமும், பிரஞ்சு மொழியின் தாக்கமும் இன்னமும் இருக்கிறது.இந்த வரலாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் நீதி அழகை விட வீதி அழகு உள்ளது என்பர்.அந்த அளவுக்கு புதுவையின் வீதிகளை செங்குத்து மற்றும் நேர்கோடுகளாக அமைத்திருப்பர்.

இவையெல்லாம் போக, 

புதுவை வில்லியனூர் சிவன் கோவில் மன்னர் ஆட்சிக்கு சான்று.

புதுவை வீதிகள் பிரஞ்சுகாரர்களின் ஆட்சிக்கு சான்று.

பாரதி மீது கொண்ட பற்றினாலே பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டு புரட்சிக் கவிதைகள் படைத்த எங்கள் சுப்புரத்தினம் புதுவையின் இலக்கிய வளர்சிக்கு சான்று.

பெண்ணாய் பிறந்து வாழ்ந்து மறைந்து 63 நாயன்மார்களுள் ஒருவராகி 12 திருமறைகளுல் ஒன்றைப் படைத்த எங்கள் புனிதவதி புதுவையின் தமிழுக்கு சான்று.

இத்தனை சிறப்பு மிக்க நம் புதுவையைப் பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கும் தெரிந்தது , பாண்டிச்சேரி மில்லியும், நாராயணசாமியும் தான்.

பேரறிஞர் அண்ணா

ஒரு முறை லண்டனில், பேரறிஞர் அண்ணா கலந்து கொண்ட கூட்டத்தில்,
ஆங்கிலத்தில் "Complete " என்ற சொல்லுக்கும் "Finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது அறிஞர் அண்ணா கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "Complete ".
அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "Finished ".
அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "Completely Finished " என்றார்.
இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்......

புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்"

புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.🚩
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன்  புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்"

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை 📫 ஆன் லைனில் அனைத்தும் 👉🏼 http://www.elections.tn.gov.in/ புதிதாக வாக்களர் அட்டை பெற 👉🏼 http://104.211.231.134/ereg/ வாக்களர் அட்டை திருத்தம் செய்ய 👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய 👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx உங்கள் போன் நம்பரை இனைத்திட 👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட 👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய 👉🏼 http://104.211.231.197/electoralservices/ 👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்ளலாம்.

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை


📫 ஆன் லைனில்  அனைத்தும்

👉🏼 http://www.elections.tn.gov.in/

புதிதாக வாக்களர் அட்டை பெற

👉🏼 http://104.211.231.134/ereg/

வாக்களர் அட்டை திருத்தம் செய்ய

👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx


வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய


👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx

உங்கள் போன் நம்பரை இனைத்திட

👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட

👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx

உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய


👉🏼 http://104.211.231.197/electoralservices/

👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்ளலாம். 

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்


விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை தெரியப்படுத்துங்கள்
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும் அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். ஆற்றில் மட்டும் கரைக்க வேண்டும். 

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்குவது நடைமுறை. ஆனால் திருமணமான மகனுக்கு இந்த வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில் இதுகுறித்து பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பணிக் காலத்தில் உயிரிழக்கும் ஊழியரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும். இதற்கு மற்ற நிபந்தனைகள் பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்னையும் இன்றி பணி வழங்கப்படும். வருமானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
55 வயதுக்கு முன், மருத்துவக் காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.