.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 18 September 2016

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்உடலானது ஆரோக்கியமாக இருக்க சுவையாக சமைத்து உண்ணும் காய்கறிகளை நன்கு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சமைக்க பயன்படும் காய்கறிகளை சிலருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இன்னும் தெரியாது. ஏனோ தானோவென்று வாங்கிய பின், என்னை ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவதே பலரது நிலைமை. மேலும் முற்றல் இல்லாமல் பிஞ்சாக இருந்தால் சமையலானது சுவையாக இருக்கும்.
எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. 

உருளைக்கிழங்கு: முளைக்கட்டாமல், பச்சை பச்சையாக நரம்பு தெரியாமல் இருக்க வேண்டும். மேலும் தோலை கீறினாலே கையோடு வர வேண்டும்.

.பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயத்தின் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் வாங்க வேண்டும்.

  வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும் 

பூண்டு: பூண்டை வாங்கும் போது பல் பல்லாக வெளியே நன்கு தெரியுமாறு இருப்பதை வாங்க வேண்டும்

பெங்களூர் தக்காளி: நன்றாக சிவந்த தக்காளியாக இருப்பதை வாங்க வேண்டும். அதுவும் பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கூட கெடாமல் இருக்கும்.

பச்சை மிளகாய்: மிளகாயானது நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த குண்டு மிளகாயை சேர்க்கும் போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

முருங்கைக்காய்: 'முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்' என்று சொல்வார்கள். இவ்வாறு முறுக்கும் போது நன்கு வளைந்தால், காய் முற்றவில்லை என்று அர்த்தம்.

கத்தரிக்காய்: கத்தரிகாய் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். முற்றல் காயாக இருந்தால் தோலானது கடினமானதாக இருக்கும்.

இஞ்சி: தோலை கீறினால், தோலானது ஈஸியாக பெயர்ந்து வர வேண்டும். அப்போது தான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.

காலிஃப்ளவர்: குருமாவுக்கு சுவையைத் தரும் காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் வாங்க வேண்டும். இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.

புடலங்காய்: கெட்டியாக இருக்கும் புடலங்காயை வாங்க வேண்டும். இதில் தான் சதைப்பகுதி அதிகமாகவும், விதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

பீன்ஸ்: பீன்ஸில் 2 வகைகள் இருக்கிறது. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் குறைவாக இருக்கும். இவற்றில் நார் குறைவாக இருப்பதையே அதிகம் விரும்புவர். இந்த பீன்ஸ் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். அதுவே மிகுந்த சுவையாக இருக்கும்.

பாகற்காய்: பாகற்காயை வாங்கும் போது உருண்டையாக இருப்பதை வாங்குவதைவிட, தட்டையான, நீளமான காயாக வாங்க வேண்டும்.

மேற்கூறியவாறு வாங்கினால் காய்களானது நீண்ட நாட்கள் இருப்பதோடு, சமையலும் சுவையாக இருக்கும்.

 வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

  சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்  

மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்

 கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
  

குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

  மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

  பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது

பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

 கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் 
  
 சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது


வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

 சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

🌻அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை
எடுத்து வருகிறது.

🌻தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

🌻 அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

🌻நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக, "டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.

🌻முதலீட்டாளர்களின் நிதி வளங்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி சார்ந்த பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.

🌻 இந்நிலையில், கல்விச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

🌻இந்த முறையில், புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம்.

🌻 அவர்களது விவரப் பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். 

🌻இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு
உள்ளதா?...
இதோ உடனே செல்லுங்கள்
திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.
நாடித் துடிப்பை பார்த்தே உங்கள்
நோயை கண்டுபிடிக்கிறார்.
வெள்ளிக்கிழமை தவிர்த்து
மற்ற எல்லா நாட்க்களிலும்
வைத்தியம்.
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே
ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது.
பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .
தேவையுள்ளவர்
இந்த வாய்ப்பை
நழுவவிடாதீர் .
மிக மிக முக்கியமான தகவல்
என்பதால் இதனை அதிகமான
அளவில் பகிர்ந்து
உங்களுடைய நண்பர்களுக்கு
இத்தகைய தகவல் சென்று சேர
உதவுங்கள்.
இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும்
மகிழ்ச்சியே.....
Sukumaran Vaidyans G A Pharmacy &
Nursing Home. Neyyattinkara P.O.,
Thiruvananthapuram-695572,Kerala State. Phone :0471 2222364

ஆப்பிளை பழிவாங்கிய சாம்சுங் நிறுவனம்.....

ஆப்பிளை பழிவாங்கிய சாம்சுங் நிறுவனம்.....

 அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது. சாம்சங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, அட்ரஸ் மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த அட்ரஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள். 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. 100 கோடி டாலருக்கும் சில்லரை.

இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சங்.

எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எல்லா ஸ்மார்ட் போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள். எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும், என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.

Saturday, 17 September 2016

ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என நீங்கள் யோசித்ததுண்டா?

ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என நீங்கள் யோசித்ததுண்டா?


தற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். 

உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான்.

வாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். 

ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

சிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் அன்னாந்து பார்த்து வியக்கும் குணமும் கொண்ட நாம், என்றாவது அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்திருக்க மாட்டோம்.

அதற்கான காரணம் இது தான்....

    
மங்காத நிறம்!

வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் நாள்பட மற்றும் அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். அனால், வெள்ளை அப்படி மங்காது.
    
வெப்பம்!

மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

    
பார்க்கக்கூடிய நிலை!

வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
    
மறுவிற்பனை மதிப்பு!

விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

    
குத்தகை!

பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.
    
செயல்பாட்டு செலவு!

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். 

இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன

உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது

டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி உணவு தயாரிப்பில் ஈடுபட் டுள்ள அனைத்து நிறுவனங்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது கட்டாயமாகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதன்படி டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், சிறு ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அங்கன் வாடிகள், அரசு மற்றும் தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் என உணவு உற்பத்தி மற்றும் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இனி உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு அல்லது உரிமம் பெற்றுதான் இயங்க முடியும்.

அந்தந்த மாநிலங்களில் செயல்படும் டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அவரவர் மாநிலங்களில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குக் குறை வான வரவு செலவு உள்ள கடை அல்லது நிறுவனங்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான வரவு செலவு உள்ள நிறுவனங்கள் தொகைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி நிறுவனத்தின் பெய ரில் உரிமம் பெற்று பின்னர் இயங்க வேண்டும்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிக மான உரிமம் பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், இரண்டரை லட்சத் துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதே எண்ணிக்கை அளவுக்கு பதிவு செய்யப் படாமலும் உணவு தயாரிக்கும் கடை களும் நிறுவனங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உணவுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் அனைத்து உணவு நிறுவனங்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகிறது. இதன்மூலம் உணவுப் பொருள் கலப்படம், சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றின் விற் பனையைத் தடுக்கவும், புகார் எழுந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இதற்காக உணவு நிறுவனங்களை பட்டியலிடும் வகையில் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. தமிழகத்தில் கடை மற்றும் நிறுவனங்களை பதிவு செய்துகொள்வதற் காக மாவட்டம்தோறும் தனியாரைக் கொண்டு பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவற்றின் மூலம், கடை மற்றும் நிறு வனங்கள் முதல்கட்டமாக இணையதளத் தில் பதிவு செய்யப்படுவதுடன் அவற் றுக்கு தற்காலிக பதிவு அல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் அந்த பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் மூலம் பதிவு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3. 

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். www.facebook.com/puradsifm 

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

கும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் !!!

கும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் !!!

கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.
கும்பாபிஷேகத்தின் வகைகள்.
1. ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
2. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
4. அந்தரிதம் – கோவில் உள்ளே ஏதேனும் தகாதன நேர்ந்துவிடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.
கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்.
1. அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
2. சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
3. பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
4. கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
5. வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்
 6. பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
7. பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்}
8. மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். { ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்}
9. அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
10. ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
11. கும்ப அலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் 
 பாவித்து அலங்காரம் செய்தல்.
12. கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.
13. யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
14. சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.
15. மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
16. பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
17.நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}
18. விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது
19. பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
20. ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
21. அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
22. பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
23. கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
24. மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
25. மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.
மற்றும் சில.
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைதல்.

145 பட்டங்கள் பெற்றவர்!

145 பட்டங்கள் பெற்றவர்!

🌻நாம் ஒரு டிகிரியை முடிப்பதற்கே ஒரு யுகத்தை கடப்பது போல் நினைப்போம். அப்படியும் முடித்தால், எத்தனை பேர் அரியர்ஸ் இல்லாமல் முடிக்க முடியும்? 

🌻இங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் 145 கல்வி பட்டங்களை தன் கையில் சாதாரணமாக வைத்திருக்கிறார்.

🌻 வாழ்க்கையில் பொருட்செல்வத்தை சேர்க்க ஆசைப்படுவோம். ஆனால், இந்த
பேராசிரியர் கல்வி செல்வத்தை சேகரித்து வைத்துள்ளார்.

🌻 அவருடைய விசிட்டிங் கார்டு ஒரு புத்தகம் போல இருக்கும். இப்போது உங்களுக்கே புரியும் எத்தனை டிகிரி முடித்துள்ளார் என்று.

🌻வடசென்னையைச் சேர்ந்தவர் வி.என்.பார்த்திபன். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். முதல் இளங்கலை பட்டத்தை கஷ்டப்பட்டு முடித்துள்ளார்.

🌻 பிறகு, முப்பது ஆண்டுகளாக கிட்டதட்ட 

12 எம்.பில்.,

 9 எம்.பி.ஏ., 

10 எம்.ஏ., 

8 எம்.காம்., 

3 எம்.எஸ்சி., 

8 எம்.ஏ. சட்டம்

 என்று பட்டங்களை வரிசையாக வைத்துள்ளார்.

🌻இதுபற்றி பார்த்திபன் கூறியது: “முதல் பட்டத்துக்கு பின்பு, நீதி துறையில் பணிக்குச் சென்றேன்.

🌻 மாற்றுச் சான்றிதழ் தேவைப்படாத இடத்தில் எல்லாம் ஒரே நேரத்தில் பல படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன்.

🌻 கடந்த 30 ஆண்டுகளாக பரீட்சைக்குத் தயார் செய்தும், புது கோர்சுகளுக்கு விண்ணப்பித்தும் என் வாழ்க்கையை கழித்துள்ளேன்.

🌻 பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமையை தேர்வு எழுதவும், ஆராய்ச்சி சம்பந்தமான பேப்பர்கள் எழுதவும் செலவிட்டுள்ளேன்.

🌻 தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பாடம் கற்பித்து வருகிறேன். 

🌻படிப்பு என்பது மிக எளிது. படிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால், கணித பாடப் பகுதி மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 

🌻அதனால், அதன் மீது ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய வெற்றிக்கு முழு காரணம் என் மனைவி.

🌻 படிப்பில் முழு கவனம் செலுத்துவதால்,
குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியவில்லை. என் மனைவி எல்லாவற்றையும் பார்த்து கொண்டு, எனக்கு ஊக்குவித்தலையும் அளிக்கிறார். 

🌻எனது மனைவி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரும் ஒன்பது டிகிரி வைத்துள்ளார்” என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப்பட்டது?

எம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப்பட்டது?

- கோ. பாண்டியன், போலீஸ் உதவி கமிஷனர் (பணி நிறைவு), செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும், தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான உறவு, தற்போது பதற்றமாக காணப்படுகிறது.

இப்போதைய முதல்வர்களுக்கு, கடந்தகால, சில நிகழ்வுகளை குறிப்பிட்டே தீர வேண்டும்...

தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரும், அப்போதைய தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக, டில்லியில் இருந்த, க. ராஜாராமும் ஒருமுறை, முன் அறிவிப்பு ஏதும் இன்றி பெங்களூரு சென்றனர்.

அப்போது, கர்நாடகாவில் முதல்வராக இருந்த குண்டுராவ் வீட்டிற்கு, எம்.ஜி. ஆர்., சென்றார். குண்டுராவின் தாயார் வீட்டில் இருந்தார். தலைமை செயலகத்தில் இருந்த, குண்டுராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறி அடித்து வீடு வந்த குண்டுராவ், எம்.ஜி. ஆரை கட்டி தழுவி வரவேற்றார். 

பின், அவருக்கு, குண்டு ராவ் விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். பிரம்மாண்டமான மேஜையில் உணவுகள் பரிமாற தயாராகின. டம்ளரில் இருந்த குடிநீரை, குண்டுராவின் தாயார் எடுத்து, எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.

வாங்க மறுத்த அவர், 'என் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது; குடிக்க, பாசனத்திற்கு தண்ணீர் இன்றி என் மக்கள் சிரமப்படுகின்றனர். நான் மட்டும் விருந்து சாப்பிடவா' என, கூறினார். எம். ஜி.ஆரின் ஆதங்கத்தை புரிந்து கொண்ட குண்டுராவ், காவிரி தண்ணீரை உடனே திறந்து விட ஏற்பாடு செய்தார்.

ஒருமுறை கர்நாடகாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவியது. இதுபற்றி. எம்.ஜி.ஆரிடம் கூறப்பட்டது. உடனே, தமிழகத்தில் இருந்து, கர்நாடகாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கப்பட்டது.

இரு மாநில அரசுகளும், தங்களின் பிரச்னை, தேவைகளை புரிந்து நடந்து கொண்டன. இப்போது, இரு மாநில முதல்வர்களும்  கவுரவம் பார்க்காமல்,நேரடியாக சந்தித்து பிரச்சனைகளை பேச வேண்டும். அதன் மூலம், இரு மாநில மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஒற்றுமைக்கும் வழி வகுக்கலாம்!

-வாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த 'என்கவுண்டர்'.. !

சென்னை:

 கன்னட சளுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜை நேரில் சந்தித்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியதாக கூறி கிஷோர் கே சாமியின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு காணப்படுகிறது.

அது இதுதான்:

கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக் கூடாது என்று வாட்டள் நாகராஜ் தலைமையிலான கும்பல் போஸ்டர்களை கிழிப்பதும் , திரையரங்குகள் முன்னர் மறியல் செய்வதும் என்று செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், அதை மக்கள் திலகம் எப்படி எதிர்கொண்டார் என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு ....

இது குறித்து தகவல் அறிந்ததும், மக்கள் திலகம் நேரே பெங்களூருக்கு புறப்பட்டார் , அந்த வாட்டாள் நாகராஜ் ஒரு முரடர் , அவரிடம் நீங்கள் சென்று பேச வேண்டுமா என்று சிலர் தடுத்த பொழுதும். 'நான் பேசப் போகிறேன், வாதிக்கப் போவதில்லை. அவர் மனிதர் தான், ஒரு இயக்கத்தவர் தான்' என்று வாட்டாள் நாகராஜின் அலுவலகத்திருள் சென்று விட்டார் .

வாட்டள் நாகராஜ், திமிருடன் அமர்ந்தப்படியே, மக்கள் திலகத்தை அமரச் சொல்லி விட்டு , 'என்னை பார்க்க வந்ததன் நோக்கம் என்ன ? என்று கேட்க ...
மக்கள் திலகம் ' தமிழ் படங்களை ஓட விடக் கூடாதுன்னு நீங்க சொல்றீங்களாம் , அதுக்கு என்ன காரணம் ? யாரும் சரியா சொல்லலை , அதான் உங்க
வாயாலேயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் ... '' என்றார் .

வாட்டள் நாகராஜ் சற்று யோசித்து பின்னர் , 'எங்க கன்னட படத்தை நாங்க எப்படி எடுத்தாலும் ஓடுறதில்லை, உங்க தமிழ் படங்கள் ஓடுது அதுக்குத் தான் வசூல். அதனால் தான் என்றார். 'சந்தோசம் , எந்த ஒரு காரியத்துக்கும் அடிப்படையை யோசிக்கணும், நீங்க தமிழ் படத்தை தடுத்தாலும் பாதிப்பு கன்னட காரர்களுக்குத் தான் என்று மக்கள் திலகம் சொல்ல .... வாட்டள் முகம் சுளித்தபடி ' புரியலே ...' என்று சொல்ல ... மக்கள் திலகம் தொடர்ந்தார் : ' கொஞ்சம் பொறுமையா கேட்கணும், நாங்க எடுக்கறது தமிழ் படமானாலும் , அதில் பணிபுரியுற பெரும்பாலானவர்கள் உங்க நாட்டுக்காரங்க தான்'

ஆரம்ப கால டைரக்டர், 300 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் எடுத்தவர் சுந்தராவ் நட்கர்னி. அவர் கொங்கனியர். உங்க மாநிலத்தவர்.

பெரிய படங்கள் எடுத்த பந்துலு யார் தெரியுமா? அவங்க மனைவி எம்.வி.ராஜம்மா யார் தெரியுமா ? உங்க நாட்டவங்க .

அங்கேயுள்ள ஸ்டூடியோ ஓனர் விக்ரம் யார்? அவர் உங்க நாட்டவர் . அவர் என்னையும் வைத்து படம் எடுத்தார் ... படம் - பட்டிக்காட்டு பொன்னையா .
என்னோடு நடித்த சரோஜா தேவி யார்? எல்லாரும் உங்க நாட்டு செல்வங்கள்.

உங்க நாட்டு மிகப் பெரிய ஹீரோ ராஜ்குமார் யார்? பூர்வீகம் திருச்சியாம். அவருடைய முதல் படமே எங்க நாட்டுக் காரர் தான் எடுத்தார் .... படம் ' வேடன் கண்ணப்பா ' ... அவருக்கு அங்கே பெரிய வீடு இருக்கு . நான் சொன்ன எல்லோருக்கும் அங்கே பெரிய பெரிய வீடு இருக்கு.

உங்க நாடு பெத்தது, இது தாய் நாடு ... எங்க நாடு வளர்த்தது , அது செவிலித் தாய் நாடு. பெத்த தாயை விட வளர்த்தவளுக்கும் மரியாதை கொடுக்கணும் இல்லையா?

எங்க நாட்டுக்காரங்களுக்கு இங்க வீடு இருக்கா? வாசல் இருக்கா? ஒருத்தர் இங்கே இருக்கிறார், அவராலும் உங்களுக்கு பெரிய வருமானம். சுவாமி ராகவேந்திரர் . புவனகிரியில் பிறந்தவர் .

தூத்துக்குடியில் தான் சங்கு விளையுது, அதில் தான் உங்க நாட்டு பிள்ளைங்களுக்கு பால் வார்ப்பாங்க. உங்க காட்டுல தான் சந்தனம் விளையுது, அதில் தான் எங்க நாட்டு தலைவர்களை தகனம் செய்வாங்க ....

இப்படி பிறப்புக்கும் இறப்புக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றுபடுது. இதுக்கு மேலையும் நீங்க தமிழ் படத்தை எதிர்க்க விரும்பினா. என் படங்களை கன்னட ஏரியாக்களுக்கு விற்க வேண்டாம்னு சொல்லிடறேன். அந்த நஷ்டத்தை புரடியூசர்களுக்கு என் சம்பளத்திலிருந்து கொடுத்து விடுகிறேன். பிலிம் சேம்பரிலும் சொல்லி கர்நாடகாவுக்கு விற்க வேண்டாம்னு கேட்டுக்கறேன் என்றார் மக்கள் திலகம் ......

அந்தக் கணமே தம்மையும் அறியாமல் இருக்கையிலிருந்து எழுந்த வாட்டாள் நாகராஜ், மக்கள் திலகத்தின் கைகளை பற்றிக் கொண்டு 'இனிமே உங்க படத்துக்கு நானே பாணர் கட்டறேன் , போஸ்டரும் ஓட்டறேன் ' என்றார் .....அது தான் மக்கள் திலகம்

விவரிப்பு: எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் .

மாலை கல்லூரி உருவான வரலாறு..

மாலை கல்லூரி உருவான வரலாறு..

ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து...

தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்....

காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க...

கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் Lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்ல....

காமராஜர்...

உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?

என்று கேட்டாராம்...

அந்த முதல்வர் 4 பேருக்கு என்று சொல்ல, இன்னும் 4 பேர் வந்தால் என்ன செய்வீர்கள்...

அதற்கு அந்த முதல்வர் இல்லை ஒரு முறை சாதம் செய்து விட்டு இரண்டாம் முறையும் செய்வேன் என்று சொன்னாராம்....

அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக்கூடாது. 3.30 க்கு கல்லூரி முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு கல்லூரி வைத்து, அதே Lab ஐ பயன்படுத்தலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி Evening College.

முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பதே மக்கள் பணி என்பதற்கான எடுத்துக்காட்டு தான்...

கர்மவீரர் காமராஜர்.

சாதம் எப்படி சாப்பிடவேண்டும் ...???

சாதம் எப்படி சாப்பிடவேண்டும் ...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. 

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள். 
கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக
இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது. 

மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். 

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். 

சிலர் சாம்பார், ரசம்,
வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்
எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள
பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

அஜினோ மோட்டோ

சீனாவில் தயாராகும் அஜினோ மோட்டோவை உலக நாடுகளில் அதன் தீங்கை அறிந்து தவிர்க்கும் காலத்தில், 

இந்தியாவில் மட்டும் விற்பனை சக்கை போடு போட்டுகிறது. உணவு விடுதியிலும், விஷேச இல்லங்களிலும் சுவைக்காக உபயோகப்படுத்தி நோய்களைப் பரப்புகின்றன. 

இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. 
#மேலும் இதைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும், அதன் காரணமாக வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. 
இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள்! இது ஒரு நச்சு உணவு! இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும்.

பெண்களே எச்சரிக்கை📡 ~~~~ ❌ROHYPNOL❌ மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்... Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்... பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்கமுடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம.் அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்கக்கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்.. இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது. இதற்கு மேல் என்ன செய்ய இயலும்?? மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே எங்கும் செல்லாதீர்கள் மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்.. 🙏🏻என்றும் மக்கள் நலப்பணியில்.....🙏🏻 🏨பழனியப்பா மெடிக்கல் குருப்ஸ் 💊புவனேஸ்வரி மெடிக்கல், 💊ஸ்ரீபழனியப்பா மெடிக்கல், 💊பழனியப்பா மெடிக்கல்1, 💊பழனியப்பா மெடிக்கல் 2, 💊அண்ணா மெடிக்கல் , உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

பெண்களே எச்சரிக்கை📡
~~~~
❌ROHYPNOL❌ மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்...
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்...
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்கமுடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம.்
அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்கக்கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..
இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது. இதற்கு மேல் என்ன செய்ய இயலும்??
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே எங்கும் செல்லாதீர்கள் மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்..

🙏🏻என்றும் மக்கள் நலப்பணியில்.....🙏🏻

🏨பழனியப்பா  மெடிக்கல் குருப்ஸ்

💊புவனேஸ்வரி மெடிக்கல்,
💊ஸ்ரீபழனியப்பா மெடிக்கல்,
💊பழனியப்பா மெடிக்கல்1,
💊பழனியப்பா மெடிக்கல் 2,
💊அண்ணா மெடிக்கல் ,

 உடுமலைப்பேட்டை,

திருப்பூர் மாவட்டம்.

இந்திய இராணுவ செய்திகள்

இந்திய இராணுவ செய்திகள்

இரஷ்யாவிடம் இருந்து பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் செய்ய இந்தியா திட்டம்

அமெரிக்காவிடம்இருந்து இந்தியா தற்போது அதிக அளவிலான ஆயுதங்கள் வாங்கியும்,புதிய ஒப்பந்தங்கள் செய்தும் வருகிறது.இதனால் இரஷ்யாவுடனான உறவு சிறிது பாதிக்கப்பட்டது உண்மை.ஆனால் இந்தியா தற்போதும் இரஷ்யாவுடைய நண்பன் எனபதை நிரூபிக்கும் பொருட்டு பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதலை மேற்கொள்ள உள்ளது. 

பெரிய திட்டங்களான 5ம் தலைமுறை விமானம் இணைந்து தயாரிப்பு,காமோவ்  Ka-226T இலகுரக யுடிலிடி வானூர்தி மற்றும் 39,000 கோடி அளவிலான எஸ்-400 அமைப்பு  வாங்குதல்,2வது அணு ஆயுத சக்தி கொண்ட நீர்மூழ்கி குத்தகைக்கு எடுத்தல் போன்ற திட்டங்களை வேகப்படு்த்த உள்ளது. இந்தியா ஏற்கனவே அகுலா வகை அணுசக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் சக்ராவை 900மில்லியன் டாலர் செலவில் 10 வருட குத்தகைக்கு 2012ல் வாங்கி செயல்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் வரும் காலத்தில் நடைபெற உயர்மட்ட அளவிலான அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் பேசப்பட உள்ளது. 16வது இந்தியா-இரஷ்ய இராணுவ தொழில்நூட்ப ஒத்துழைப்பு குழு வரும் வியாழன் மற்றும் புதன் சந்திக்க உள்ளனர். 

இதில் கூட்டு இராணுவத் தளவாட தயாரிப்பு,கப்பல் கட்டுதல் மற்றும் கூட்டு விமானத் தயாரிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும்.எது எப்படியோ!! இந்தியா இரண்டு வல்லரசு நாடுகளிடமும் (அமெரக்கா,இரஷ்யா) சமமான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.உதாரணமாக   இராணுவப் பயிற்சி.

இந்த மாதத்தில் இந்திய இராணுவம் அமரிக்கா மற்றும் இரஷ்யா இராணுவத்துடன் (தனித்தனியாக ) யுத்தப் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.அமெரிக்க மற்றும் இந்திய துருப்புகள் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர போர்ப்பயிற்சியான "யுத் அபயாஸ்" இந்த வருடம்  உத்ரகண்டில் செப்டம்பர் 14-27 தேதிகளில் நடைபெற உள்ளது.இதில் அமெரிக்க துருப்புகளும் இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களும் கலந்து கொள்வர்.

அதே போல் இரஷ்யா இந்தியா இணைந்து மேற்கொள்ளும் "இந்திரா" போர்பயிற்சி இரஷ்யா துருப்புகளுக்கும் இந்தியாவின் குமாவோன் ரெஜிமென்ட் துருப்புகளுக்கும் செப்டம்பர்  22 முதல் அக்டேபர் 2 வரை இரஷ்யாவின் விளிடிவோஸ்டோக்கில்  நடைபெறும்.மேலும் இந்தியா இரஷ்யா கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும்  இந்திரா கடற்படை மோர்பயிறச்சி டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.அதே சமயம் அமெரிக்கா,இந்தியா,ஜப்பான் கடற்படைகள் பங்கேற்ற மலபார் போர்ப்பயிற்சி சில நாட்களுக்கு முன் தான் நடந்து முடிந்தது.

இந்தியா  FGFA தயாரிப்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளது.ஆனால் இந்தியாவோ வடிமமைப்பில் சிறு மாறுதல்களை எதிர்பார்க்கிறது. மேலும் இரஷ்யா தனது அணுசக்தி கொண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்குறிப்பின படி அமெரிக்கா தனது அணுசக்தி விமானம் தாங்கி கப்பலுக்கான தொழில்நுட்பத்தை அதாவது அணுசக்தி ஏற்படுத்தும் அமைப்பை  இந்தியாவிற்கு வழங்க தயாராக இல்லை . 
 ரபேல் ஒப்பந்தம் மீதான இறுதிக் கட்ட முடிவை எடுப்பதற்காக ஒப்பந்தத்தின் முழு விவரம் அடங்கிய பைல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த பல பில்லியன் டாலர் மதிப்பிலான ரபேல் போர்விமான ஒப்பந்த்தின் இறுதி ஒப்பந்த நகல் கடைசி கட்ட அனுமதிக்காக பிரதமர் அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது.

இதைப் பற்றி மேலதிக விவரம் தர அமைச்சகம் மறுத்துள்ளது.பிரான்ஸ் தரப்பு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

7.8 பில்லியன் டாலர் செலவில் 36 விமானங்கள் வாங்கப்பட உள்ளன.ஒவ்வொரு விமானமும் அதனோடுஇணைந்த ஆயுதங்களோடு தான் வரும்.

அதில் ஒன்று மீட்டியோர் ஏவுகணைகள் உலகின் சிறந்த ஏவுகணைகளாக உள்ளன.இஸ்ரேல் தயாரிப்பு Israeli helmet mounted display யும் வரும்.

இரபேல் விமான ஒப்பந்தம் விமானப்படைக்கு இன்றியமையாத ஒன்று ஆகும்.விமானப்படையின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது .இந்நிலையில் புதிய விமானங்கள் வாங்க நாம் செய்யும் தாமதத்திற்கு நாம் பெரிய விலை தர நேரலாம்.இராணுவ தீர்வை நாடி இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்மிடமே இருந்திருக்கும் - விமானப்படை தளபதி

1947-ம் ஆண்டு நாம் ராணுவ தீர்வை நாடி இருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்மிடமே இருந்திருக்கும் என்று விமானப்படை தளபதி கூறினார்.

இந்தியா தயக்கம்

டெல்லியில் நடைபெற்ற விமானப்படை குறித்த கருத்தரங்கத்தில் விமானப்படை தளபதி அருப் ராஹா பேசுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நெஞ்சில் தைத்த முள்ளாக குத்திக்கொண்டு இருக்கிறது, பாதுகாப்பு தேவைகளுக்கு, நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுவது இல்லை என்ற வழக்கத்திற்கு மாறான கருத்தை தெரிவித்தார். 

அருப் ராஹா பேசுகையில், “ ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிப்பிட்டு பேசுகையில் இந்தியாவின் பாதுகாப்பு சூழ்நிலை தற்போது பாழ்பட்டு கிடக்கிறது. ராணுவ பலத்தின் ஒரு அங்கமான விமானப்படையின் பலம், இந்த பிராந்தியத்தில் மோதலை முறியடிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் அவசியம். நம்முடைய உயர்ந்த சித்தாந்தங்களால் ஆளப்பட்டு வருகிறோம். பாதுகாப்பு தேவைகளுக்கு, நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுவது இல்லை. சுமுகமான சூழ்நிலையை பராமரிப்பதற்கு கூட ராணுவ பலத்தை பயன்படுத்தாமல் புறக்கணிக்கிறோம்.

கடந்த காலங்களில் போர் ஏற்பட்டபோது கூட எதிரிகளை ஒடுக்குவதற்கு விமானப்படையை பயன்படுத்த இந்தியா தயக்கம் காட்டியது,” என்றார். மேலும் பேசுகையில், கடந்த 1947-ம் ஆண்டு, காஷ்மீர் மீது படையெடுப்பு நடந்தது. அப்போது, விமானப்படை நமது வீரர்களுக்கு உதவிகரமாக இருந்தன. போர் தளவாடங்களை போர்முனைக்கு கொண்டு போய்ச் சேர்த்தன. அப்போது, ராணுவ தீர்வு கண்ணுக்கு எட்டிய தொலைவில் இருந்தது. ஆனால், தார்மீக அடிப்படையில், பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்கு நாம் ஐ.நா. சபைக்கு பிரச்சினையை கொண்டு சென்றோம். அதனால் பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. ராணுவ தீர்வை நாடி இருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்மிடமே இருந்திருக்கும். இப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர், நம் நெஞ்சில் தைத்த முள்ளாகி விட்டது.

1962-ம் ஆண்டு போரிலும், விமானப்படை அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. 1965-ம் ஆண்டு போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் விமானங்கள் நமது விமான தளங்கள் மற்றும் விமானங்கள், உள்கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தன. அப்படி இருந்தும், அரசியல் காரணங்களுக்காக, நமது விமானப்படையை பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்கவில்லை. நாம் பயங்கர பின்னடைவை சந்தித்த போதிலும், பதிலடி கொடுக்கவில்லை. 1971-ம் ஆண்டு போரில்தான், விமானப்படையின் பலம் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. முப்படைகளும் முற்றிலும் இணைந்து போரிட்டதால், வங்காளதேசம் உருவானது.

 ஆனால், இப்போது நிலைமை மாறி உள்ளது. நாட்டை பாதுகாக்க விமானப்படையின் பலத்தை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அருப் ராஹா கூறிஉள்ளார். 

இந்திய இராணுவச் செய்திகள்

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்கள்

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற  பதக்கங்கள் 
==================================================
.
பாராலிம்பிக் போட்டிகள் 1960 முதல் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன. இந்தியா 1968ல் முதல்முறையாக பங்கேற்றது. 1960, 1964, 1976, 1980ல் பங்கேற்கவில்லை.

ரியோவில் நடைபெறும் இந்த பாராலிம்பிக்குடன் சேர்த்து இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 10 பதக்கங்கள் பெற்றுள்ளது. ( செபடம்பர் 10 / 2016 வரை ) 

முதல் தங்கம் 50 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில் முரளிகாந்த் பெட்கார் மூலம் 1972ல் ஜெர்மனி கெட்டில்பார்க்கில் நடந்த பாராலிம்பிக் மூலம் கிடைத்தது.

2வது தங்கம் 2004ல் ஏதென்சில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் கிடைத்தது. ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திர ஜாஜ்ஜாரியா இதை பெற்றுத்தந்தார்.

3வது தங்கத்தை,  தற்போது  T - 42 உயரம் தாண்டும் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு பெற்றுத்தந்துள்ளார்.

1984ல் அமெரிக்காவில் நடந்த  பாராலிம்பிக்கில் ஜோகிந்தர்சிங்பேடி குண்டுஎறிதலில் வெள்ளியும், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் வெண்கலமும் வென்று 3 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார். 

தற்போதைய ரியோ போட்டியின் T - 42 உயரம்  தாண்டும் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாடி வெண்கலம்  வென்றுள்ளார்.

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!!

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ!!!

W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
,
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )
~
 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll

(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )
கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , நாடு; கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

2015 ஆய்வுகளின் படி :

( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றா
ர்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (ஐரோப்பிய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.

("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.

நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்

- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம்  = மொழி

சீனர்களின் மண்டரின் மொழி மற்றும் யூதர்களின் ஹிபுரு'வின் தாய்மொழி அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் , மேலும்1000 Km க்கு தூரத்திற்கு ஒரே மொழி நிச்சயம் சற்று வேறுபடும்!
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெலுங்கு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெலுங்கு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். 
மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.மு 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
,,,,
ஆனால் நம் தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.மு 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.மு 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. மு 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.மு 5000 பரிபாடல்;
கி.மு 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன. மேலும் பழமையான நூல்கள் கடல் கோளாலும், சூழ்ச்சிகளாலும் அழிந்து விட்டன...
...
இத்தகைய தமிழின் சிறப்புகளை 
பகிருவதற்கு தயங்க வேண்டாம்,,, தமிழ் வாழ்க!!!

ஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது எப்படி?

ஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது எப்படி?
        கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக்
கொண்டு வந்தது.

          இதற்கு ஃபேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர் ஆதரவு தந்தாலும் ஒருசிலர் இதை விரும்பவில்லை. தேவைப்படும் வீடியோவை மட்டுமே பிளே செய்து பார்த்த வந்த பயனாளிக்கு இந்த வசதி அசெளகரியமாக இருந்தது.


அதுமட்டுமின்றி மொபைலில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு தேவையில்லாமல் அவர்களுடைய டேட்டா ஆட்டோமெட்டிக் வீடியோ பிளேவால் செலவானது.

கவலை வேண்டாம். இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது ஆட்டோமெட்டிக் வீடியோ பிளேவை நீங்கள் உங்கள் மொபைலில் டிஸேபிள் செய்யலாம். அது எப்படி என்பதை தற்போது பார்ப்போமா.. 

ஃபேஸ்புக்கில் லாக் அவுட் ஆப்சனுக்கு சற்று மேலே உள்ள செட்டிங்ஸ்-ஐ முதலில் கிளிக் செய்ய வேண்டும்

அதில் உள்ள டிராப் டவுன் ஆப்சனை கிளிக் செய்து பின்னர் அதில் உள்ள ஆட்டோ பிளே வீடியோவை தேர்வு செய்து அதை ஆஃப் செய்யுங்கள்


மேற்கண்ட வழி கம்ப்யூட்டர் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும். இனி ஆண்ட்ராய்டு மொபைல் போனில் எப்படி டிஸேபிள் செய்வது என்று பார்ப்போம்.

வலது மேல் பகுதியில் உள்ள செட்டிங்ஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்

ஆப் செட்டிங்கை கண்டுபிடிக்கும் வரை ஸ்குரோல் செய்யுங்கள்

வீடியோ ஆட்டோ பிளே ஆப்ஷன் வந்தவுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்

அதில் உள்ள ஆட்டோ பிளே ஆப்சனில் ஸ்டாப் என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்
இனி ஐஓஎஸ் பயனாளிகளுக்கு எப்படி என்பதை பார்ப்போம்
வலது மேல்புறத்தில் உள்ள செட்டிங் ஆப்சனை தேர்வு செய்யுங்கள்
ஸ்குரோல் டவுன் செய்து செட்டிங்கை தேர்ந்தெடுங்கள்

அக்கவுண்ட் செட்டிங் சென்று அதில் உள்ள வீடியோ மற்றும் போட்டோவை தேர்வு செய்யுங்கள்

இனி ஆட்டோ ப்ளேயை அழுத்துங்கள்

ஆட்டோ பிளே பக்கம் வந்ததும் 'நெவர் ஆட்டோபிளே வீடியோஸ்' என்பதை கிளிக் செய்யுங்கள். இனி ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோ உங்களை தொந்தரவு செய்யாது⁠⁠⁠⁠

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்....

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய்,.. இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய்.
மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க,

மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.

பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான்.

தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர்
தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான்.

இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.

கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது
மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை
மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து
அழைத்துவரும் காவலன் அப்பா.

காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா.

ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும்
சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா
மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா.

அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது.

ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன்,
என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக்
கொண்டிருப்பவர் தான் அப்பா.

பச்சை தேங்காயின் பயன்கள்

பச்சை தேங்காயின் பயன்கள்

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும்      குணமாகக்கும்....

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...

இரத்தத்தை சுத்தமாக்கும்...

உடலை உரமாக்கும்.....

உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை......               நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....

இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...

குறிப்பு :
தேங்காய் குருமா 
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)

தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்... 

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி 🤒 ஊ..ஊ..ஊ.... 

தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காபற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்🤔?..

காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை(அ)கருப்பட்டி(அ)தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரி்ன் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...

மெய்ப்பொருள் காண்பது அறிவு 🙂

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.

சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.

உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)

கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?

அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.

சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.

அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.

BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.

BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.

BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.

BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.

BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.

மதுவை ஒழிப்போம்.

பேரறிஞர் அண்ணா .

பேரறிஞர் அண்ணா .

அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!
* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!
* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!
* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!
* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!
* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!
* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!
* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!
* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்ப
டி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!
* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!
* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!
* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!
'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!
* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
* போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்துபோயிருந்தார். இப்படி அண்ணாவின் வாழ்க்கை, தூரத்தில் இருப்பவர்களுக்காகப் பிரதிபலன் பார்க்காததாகவே இருந்தது!

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடந்த10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவைவிலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டேபோகிறது. இட்லி, தோசை மாவுவிற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின்வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாகமாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும்சிறிய மளிகைக்கடை முதல் பெரிய
ஷாப்பிங்மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி– ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோபலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளைசற்று அலசிப் பார்த்தால் நம்உதிரமும் உறைந்து போகும் அளவிற்குஅதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!
1. 6 நாட்கள்வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும்காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாடபயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்துவிற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
2. அதாவதுஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்கவேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்துஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம்கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல்உண்டாகும் அபாயம் இருக்கின்றது.
3. என்னதான்நல்ல அரிசி உளுந்து போட்டாலும்நல்ல தண்ணீரை ஊற்றி தான்மாவு அரைக்க வேண்டும். ஆனால்பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர்மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.
4. நம்முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒருகை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம்ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டிபயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்குகீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும்அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன்ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்குஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக்கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சிகடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில்பரவலாக சோதனை (ரெய்டு) நடத்திதரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது.
எனவே,நமக்கு நன்கு தெரிந்தகலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்துவிற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளைமட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள்தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதுநலம்!